சனி, 20 ஜூன், 2009

பயணம் ௨



அந்த நேரக்காப்பாளர் கட்டிய

திசையிலிருந்த பேருந்தில் , நானும்


கூட்டத்தோடு கூட்டமாக ,


பல்லியைபோல ஒட்டிக்கொண்டேன் .......



பேருந்தும் நேரமும் சேர்ந்து உருண்டது .....


நான் இடித்துக்கொண்டு உள்ளே சென்றேன்


நடத்துனரை பார்க்க முடியவில்லை

15 நிமிட ரெண்டுகால் தவத்திற்கு பிறகு

கூட்டம் குறைய தொடங்கியது ......



10 நிமிடம் கழித்து

இருக்கை ஒன்று கிடைத்தது .....


பக்கத்திலிருந்தவன் வாசனை ... தவறு ..


நாற்றம் ... மயக்கம் கொடுத்தது ......



15 நிமிட பிரதனைக்கு பின்


ஜன்னல் இருக்கை ஒன்று காலியானது ..


இடம் பெயர்த்தேன் .....



வேக தென்றல் வருடி விட்டது ...


தூங்க சொல்லி தட்டிக் கொடுத்தது ....




"ஹலோ !!.. தூங்கிடிங்கள ?!!!... டிக்கெட் எடுங்க ..."


"சிதம்பரத்கு ஒன்னு "


"சிதம்பரமா ? இது விழுப்புரம் போற பஸ்சு ...!!!!!"




இது தான் இன்றைய மக்களின் வேகமான வாழ்கையின் முடிவு ................

3 கருத்துகள்:

மாதேவி சொன்னது…

இது தான் இன்றைய மக்களின் வேகமான வாழ்கையின் முடிவு ................

ஆமாம் அன்றாடம் பேருந்துப் பயணங்களில் இது போன்ற பலரைச் சந்திப்பதுண்டு.

கிஷோர் சொன்னது…

கலக்கறே முரளி பிரமாதம் :)

முரளி வேணுகோபாலன் சொன்னது…

இல்லடா .. சும்மா முயற்சி பண்ணேன் .... அவ்வுளவுதான் ...