
பேருந்தில் பயணம் செய்த போது
வந்தது அந்த sms......
எடுத்து பார்த்து ,
ஒரு சிரிப்புடன் வைத்து விட்டேன் ....
ஒரு சிரிப்புடன் வைத்து விட்டேன் ....
நண்பனின் ஆறுதலுரை ......
பக்கத்தில் இருந்த்தவர் கேட்டார் ,
"என்ன சார் , சொக்கா ?"
பொய் சொல்ல மனமில்லை
வேலை போன கதையை சொன்னேன் .....
தன் நிறுத்தம் வந்ததாக சொல்லி
எழுந்தவர் திரும்பி , என்னைப் பார்த்து சொன்னார் ...
" தம்பி , கப்பலிலிருந்து தூக்கி வீசப்பட்ட
எலி நீ,
முளுகப்போகும் கப்பலிலிருந்து,
நீ நீந்தும் திசையில் தான் ...
தீவுகள் உள்ளன ....
கடவுள் உன்னை காப்பாற்றுவர் ....."
வண்டியின் சக்கரங்கள் சுழலும்போது ....
என் மனமும் கொஞ்சம் சுழன்றது முன்னேறியது ...
நம்பிக்கையை நோக்கி .....
அவர் சென்ற திசையைப் பார்த்து ..
கேட்டேன் ... " அல்லா !!!!! யார் இவர் ???!!!!"...
பதில் இல்லை ......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக